வயசானவங்களையும் நம்பாதீங்க.... “அவசரம்.. கொஞ்சம் உன் செல்போனை கொடும்மா...” பரிதாபப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

 
ரேணுகா

யாரைத் தான் நம்புவதோ... போங்கடா... போங்க... என்கிற பாட்டு தமிழகத்தைத் தாண்டியும் எதிரொலித்து கொண்டிருக்கிறது. வயதானவர் தானே... பார்க்கவும் டீஸண்டாக இருக்கிறார்... கஷ்டத்துல இருக்கிறவருக்கு உதவி செய்த இளம்பென், ட் தனது செல்போனைத் தொலைத்து நிற்கிறார். இது செல்போனுடன் போவது கிடையாது. செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கும் எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அத்தனையும் மூன்றம் நபர் ஒருவரின் கைக்கு சென்றிருக்கிறது. வேலூர் மாவட்டம் ஆரணி சாலையில் கவியரசன் என்பவர் செல்போன் சேவை மற்றும் விற்பனைக் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் ரேணுகா என்ற பெண் வேலை செய்து வருகிறார். இங்கு நேற்று காலை டிப்-டாப் அணிந்த முதியவர் ஒருவர், "எனது செல்போனின் டிஸ்ப்ளே உடைந்து விட்டது, அதை சரி செய்ய வேண்டும்" என்று கேட்டார். கடையில் வேலை பார்த்த ரேணுகா, கவியரசனை அழைத்து விலையை விசாரித்தபோது, 1700 ரூபாய் என்றார்.

இதையடுத்து, அந்த நபர், "இங்கே நிறுவனத்தை விட குறைவாக உள்ளது. ஆனால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்" என்று கேட்டுள்ளார். ஆனால் உடனடியாக தரமுடியாது , கொஞ்சம் தாமதமாகும் என்று கடையின் உரிமையாளர் கூறியதாக தெரிகிறது. முதியவர் கடையின் விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த முதியவர், “எனது வாகனம் பழுதடைந்து விட்டது. அதைப் படம் பிடித்து மெக்கானிக்கிற்கு அனுப்புங்கள்; என் மொபைலில் உள்ள கேமரா பழுதாகி விட்டது’’ என்று கூறி விட்டு கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் செல்போனை வாங்கினார். அப்போது செல்போனின் பாஸ்வேர்டை எடுத்து, "நான் வக்கீலாக பணிபுரிகிறேன். அண்ணன் டாக்டர். ஐந்து நிமிடத்தில் வந்து செல்போனை தருகிறேன்" என்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் முதியவர் வராததால் சந்தேகமடைந்த பெண் செல்போன் எண்ணுக்கு போன் செய்து பார்த்தார். அதில் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. அப்போது தான் முதியவர் செல்போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து கடை உரிமையாளர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முதியவர் கடையில் செல்போனை ஏமாற்றி திருடி செல்லும் வீடியோ சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web