அதிர்ச்சி வீடியோ.. நடந்து செல்லும் ஜோடியின் மீது தண்ணீரை ஊற்றி அட்டூழியம் செய்த வடக்கன்ஸ்!

 
வாரணாசி ஜோடி

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இந்த சம்பவம் நடந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், ஒரு ஜோடி நடந்து செல்லும் போது ஒரு கும்பல் தம்பதியினர் மீது தண்ணீரை வீசியது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தண்ணீர் ஊற்ற வேண்டாம் என எச்சரித்தனர்.


ஆனால், அந்த கும்பல் மீண்டும் தண்ணீரை ஊற்றி சத்தம் போட்டது. கும்பலில் இருந்தவர்கள் செய்வதைப் பார்த்து, அங்கிருந்த ஒரு சிறுவனும் அது தவறு என்று தெரியாமல் தம்பதியின் மீது தண்ணீரை ஊற்றினான். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி கொண்டாட்ட நாளில், மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஹோலி பண்டிகையை தவறாக பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளவாசி ஒருவர் கூறுகையில், 'ஒரு விழாவை தவறாக பயன்படுத்தும் இவர்களை சும்மா விடக்கூடாது. மேலும் கும்பலில் பெரியவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதும், சிறியவர்கள் ஈடுபடுவதும் சமூகம் எப்படி வளர்ந்து வருகிறது என்பதை காட்டுகிறது'' என்றார். ஹோலி அன்று, முஸ்லிம்கள் மீது வலுக்கட்டாயமாக வண்ணங்களை வீசும் வீடியோவும் வைரலாகி அதிர்ச்சி அலைகளை அனுப்பியது.

சுதந்திர இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடமாட முடியாத நிலையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும் இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளவாசிகள் கேட்டுக்கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web