அதிர்ச்சி வீடியோ... பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை அடித்து துவைத்த இளம்பெண்...!

 
அடித்து

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  மிர்சாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   ஆட்டோ ஓட்டுனர் அதிகமாக கட்டணம் வசூலித்ததாக கூறி இளம் பெண் தாக்கியதாக கூறியுள்ளார்.  ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னை அடித்து அவமானப்படுத்தி விட்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறியிருப்பதாகவும்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கி விடும்போது தாங்கள் மாணவிகள் என்பதால்  அவர்கள் கட்டணம் தர மறுத்ததாகவும் தொடர்ந்து கட்டணம் பெற கேட்டதால் ஒரு மாணவி என் காலரை பிடித்துக் கொண்டு பின்னர் அவர் சகோதரியிடம் செல்போனை கொடுத்து வீடியோ பதிவு செய்யும்படி  ஆட்டோ ஓட்டுனர் தன் புகாரில் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் இந்த வீடியோவை நான் பதிவிட்ட பிறகு எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தது.   அதன் காரணமாகத்தான் வீடியோவை வெளியிட்டேன் எனவும் கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீசார்   வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!