அதிர்ச்சி... கணவனைக் கொன்று சாக்குமூட்டையில் வீசிய மனைவி - சிசிடிவி ஆதாரத்தால் சிக்கினார்!

 
பாலியல் கொலை உல்லாசம் க்ரைம் பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

சென்னையில் மதுபோதையில் தகராறு செய்த கணவரை மனைவியே கத்தியால் குத்தி கொலை செய்து, உடலைச் சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், சடலத்தை மீட்டுப் பார்த்தபோது அது சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் என்பது தெரிந்தது.

பள்ளி மானவி தற்கொலை

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் ஒரு பெண் அந்தச் சாக்குமூட்டையை மிகவும் சிரமப்பட்டு இழுத்து வந்து கால்வாயில் வீசுவது பதிவாகியிருந்தது.

அந்தப் பெண் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த அம்பிகா (57) என்பது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் தினசரி மது அருந்திவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், நேற்றிரவு ஏற்பட்ட கடுமையான தகராறில் ஆத்திரமடைந்து அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அம்பிகாவை அண்ணாநகர் போலீசார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். மதுபோதை மற்றும் குடும்ப வன்முறை காரணமாகவே இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.