அதிர்ச்சி... 100 ரூபாய்காக கணவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெறும் 100 ரூபாய் பணத்திற்காக ஏற்பட்ட குடும்பத் தகராறில், தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொன்ற மனைவியைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே, கடந்த சில நாட்களாகவே கடுமையான குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது. சம்பவத்தன்று வெறும் 100 ரூபாய் பணம் தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

100 ரூபாய் பண விவகாரத்தில் ஏற்பட்ட மோதலின் போது, கணவர் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அக்கம் பக்கத்தினர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. கணவர் தன்னை அவமானப்படுத்தியதால் கடும் ஆத்திரமடைந்த மனைவி, பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார். நள்ளிரவில் கணவர் ஆழமான தூக்கத்தில் இருந்த தருணத்தைப் பயன்படுத்தி, அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.
அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் மற்றும் புகை வருவதைக் கண்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயில் கருகிய கணவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மனைவியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் கணவர் தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொன்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். வெறும் 100 ரூபாய்க்காகக் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
