அதிர்ச்சி... உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக் கொலை!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலியை அவரது கள்ளக்காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதம் (30). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுகுமார் என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை நவநீதம் தனது கால்நடைகளை மேய்ப்பதற்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது போதையில் இருந்த சுகுமார், நவநீதத்தைச் சந்தித்துள்ளார். அப்போது சுகுமார் தன்னை உல்லாசத்திற்கு வருமாறு நவநீதத்தை அழைத்துள்ளார். நவநீதம் இதற்கு மறுப்புத் தெரிவித்ததோடு, சுகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுகுமார், மறைத்து வைத்திருந்த துண்டால் நவநீதத்தின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் நவநீதம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேடிச் சென்றபோது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சுகுமாரை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். மது போதையில் கள்ளக்காதலியைக் கொலை செய்த இந்தச் சம்பவம் புத்தேரி கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
