உஷாரா இருங்க மக்களே!!! வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் அதிகரிக்குமாம்!

உஷாரா இருங்க மக்களே!!! வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் அதிகரிக்குமாம்!

இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதயும் கொரோனா ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உஷாரா இருங்க மக்களே!!! வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் அதிகரிக்குமாம்!

இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18.29 -கோடிக்கும் அதிகமாக உள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16.75 கோடி. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39.62 லட்சம் பேர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 11,455,327பேர். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் டெல்டா வகை இதுவரை 96 நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளது,இந்த எண்ணிக்கை சென்ற வாரத்தை விட 11 நாடுகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உஷாரா இருங்க மக்களே!!! வரும் மாதங்களில் டெல்டா வகை வைரஸ் ஆதிக்கம் அதிகரிக்குமாம்!

சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவித்து உள்ளது. இனி வரும் தினங்களில் டெல்டா வகை கொரோனா உலக நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

From around the web