பெரும் சோகம்... ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம்!

 
ஷ்ரத்தா வாக்கர்


 
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவாக்கர் 2022ல்  காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  இச்சம்பவம் குறித்து அவரது தந்தை விகாஸ் வாக்கர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷ்ரத்தாவின் காதலன் அஃப்தாப் பூனாவாலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  தனது மகள் கொலை வழக்கில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து  நியாயம் கேட்டு தொடர்ந்து போராடி வந்தார்.

ஷ்ரத்தா வாக்கர்

இந்நிலையில் ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் தனது இல்லத்தில் உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷ்ரத்தா


வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறி டெல்லியில் வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர், காதலனால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதிகளில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இந்த வழக்கில் 6,629 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  மகளின் இருப்பிடம் தெரியாமல், காவல்துறையினருக்குப் புகார் தெரிவித்திருந்த விகாஸ் வாக்கர், மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!