ஸ்ரேயஸ் ஐயரின் சகோதரிக்கு பாலியல் மற்றும் கொலை மிரட்டல்!

 
ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயரின் சகோதரிக்குச் சமூக வலைதளங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், தனது சகோதரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஆதரவாகச் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து இத்தகைய அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் கணிசமாக அதிகரித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பக் காலகட்டங்களில் சமூக வலைதளப் பயனர்கள் சிலர் தனது உடல் அமைப்பு மற்றும் தோற்றத்தைக் கேலி செய்து பதிவுகளை இட்டு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகப் பின்னர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்களையும் விடுக்கத் தொடங்கியதாகவும் அவர் மிகுந்த வேதனையுடன் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.