ஸ்ருதிஹாசன் ரகசிய திருமணம்...? திரையுலகில் பரபரப்பு... !

 
ஸ்ருதிஹாசன்

 ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மூத்த மகள், ஸ்ருதிஹாசன்.  இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில்  குழந்தை நட்சத்திரமாக  அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முண்ணனி நாயகிகளில் ஒருவரானார்.   ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.  3, புலி, வேதாளம், சிங்கம் 3  போன்ற  கமர்ஷியல் படங்களிலும் இவரது நடிப்பு பேசப்பட்டது.  தெலுங்கு பட உலகில் ஸ்ருதிக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில்  அடுத்தடுத்து  பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ படத்தில்  இவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.  


ஸ்ருதிஹாசன்   லண்டனில் செட்டிலாகி   சாந்தனு ஹசாரிக்காவுடன்  டேட்டிங்கில் இருந்து  வருகிறார். ஸ்ருதி, சமீபத்தில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் சமூக வலைதளங்களில் தம்மை எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார்.  இன்ஸ்டாவில்  அடிக்கடி தனது காதலர் சாந்தனுவுடன் எடுத்த புகைப்படங்களையும்  வெளியிட்டு வருகிறார்.  
 பாலிவுட்டில் ஸ்ருதியின்  நட்பு வட்டாரங்களில் ஒருவரான   ஓர்ஹான்   ஸ்ருதிஹாசன் குறித்து ” ஸ்ருதிஹாசன் ஒரு முறை போட்டோ எடுக்கும் போது தன்னிடம் கோபமாக நடந்து கொண்டார்.  அவரது கணவர் சாந்தனுவுடன் தான் நல்ல நட்பில் இருந்து வருகிறார் எனப்  பதிவிட்டிருந்தார்.

ஸ்ருதிஹாசன்

இந்த தகவலின் படி   ஸ்ருதிஹாசன் தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் பரவத் தொடங்கின.  ஸ்ருதிஹாசன் இது குறித்து   “எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. நான் எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக இருக்கும் போது, இதையும் சொல்வேன். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.  தெரியாதவர்கள் தயவு செய்து அமைதியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு சில நாட்களுக்கு முன்   தனக்கு ‘திருமணம்’ என்ற வார்த்தையை கேட்டாலே பயமாக இருப்பதாக கூறியிருந்தார்.  எனக்கு  காதலருடன் இருக்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவருடன் இணைந்து வேலை செய்வது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.  “இது திருமணத்தை விட சிறந்தது இல்லையா?” எனவும்  கூறியிருந்தார்.  

From around the web