“உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியைத் தயார்படுத்த வேண்டும்” - கேப்டன் சுப்மன் கில்

 
சுப்மன் கில்

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு அணியை இப்போதே முழுமையாகத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்: வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரானது தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

சுப்மன் கில் – இஷான் கிஷன்

மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கில், அவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும், குறிப்பாக ரோகித் தனது கடந்த 4 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை விளாசியுள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உலகக் கோப்பைக்கு இன்னும் போதிய அவகாசம் இல்லாததால், இனி வீரர்களைப் பரிசோதித்துப் பார்க்கும் முறைகளைக் கைவிட்டு, உலகக் கோப்பையில் விளையாடத் தகுதியான முதன்மைக் கூட்டணியை இப்போதே உறுதியாக உருவாக்க வேண்டும் என கில் கேட்டுக்கொண்டுள்ளார்.