சித்த மருத்துவர் ஊசி போட்டு ஒருவர் பலி... கதறும் உறவினர்கள்!

 
பெருமாள்
 சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் சித்த மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராஜேந்திரன் என்ற முதியவர் இந்த மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவருக்கு பெருமாள் ஆங்கில மருத்துவமான ஊசி போட்டுள்ளார்.

 அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
இந்நிலையில் ஊசி போட்ட 10 நிமிடங்களில் ராஜேந்திரன் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், ஊசி போட்டதில் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

தொடர்ந்து சித்த மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது மருத்துவமனையில் இருந்து ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகள் ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உடல்நலக்குறைவுடன் சித்த மருத்துவமனைக்கு வந்த முதியவருக்கு சித்த மருத்துவம் படித்த டாக்டர், ஆங்கில மருத்துவம் பார்த்து ஊசி போட்டதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web