அதிர்ச்சி!! சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த சித்தி!!

 
பரந்தாமன்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியில் வசித்து வருபவர்    கோபால். இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.   இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது 9 வயது மகன் பரந்தாமனுடன் தனியாக வசித்து வந்தார்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதேப்பகுதியை சேர்ந்த கௌசல்யா   என்ற பெண்ணுடன் கோபால் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி சிறுவன் பரந்தாமன் காணாமல் போய்விட்டான்.

போலீஸ்

பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் சிறுவன் சடலமாக மிதந்துள்ளார். இதுகுறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் , சிறுவனின் உடலைக் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுவன் மரணம் தொடர்பான விவகாரத்தில் போலீசாருக்கு கௌசல்யா மீது சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து கௌசல்யாவை பிடித்து தீவிர விசாரணை நடந்தினர். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

சிறுவன் கைது


கௌசல்யாவுக்கும் அதேபகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் காமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கோபால் வீட்டில் இல்லாத நேரத்தில் கௌசல்யா தனது கள்ளக்காதலன் காமேஷை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.இந்நிலையில் கௌசல்யா - காமேஷ் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுவன் பரந்தாமன் பார்த்துள்ளார். இதனை தனது தந்தையிடம் கூறப்போவதாக சிறுவன் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கௌசல்யா தனது கள்ளக்காதலன் காமேஷுடன் சேர்ந்து சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதனையடுத்து சிறுவன் உடலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது.  தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் காமேஷை தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web