எஸ்பி அலுவலக முற்றுகை... போலீசாருடன் வாக்குவாதம்.. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கூண்டோடு கைது!

 
அனிதா

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைத் தணிக்கும் வகையில், காவல் துறை தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாகத் தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில், ஆத்தூரில் வைத்துப் போலீசார் அவரைக் கைது செய்தனர்.

க்ட்ஃப்

இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பாக திமுகவினர் திரண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எஸ்பி அலுவலகத்தின் முன்பு திரண்ட திமுகவினர், அனிதா ராதாகிருஷ்ணனின் கைதைக் கண்டித்துக் காவல் துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் 10 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.