அதிகாலையில் அதிர்ச்சி... 4.9 ரிக்டர் அளவில் சிக்கிமில் நிலநடுக்கம்!

 
நிலநடுக்கம்

 

சிக்கிம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மாநிலத் தலைநகர் காங்டாக் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன.

தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, இன்று (நவம்பர் 12) அதிகாலை 4.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு சிக்கிமின் கியால்ஷிங் மாவட்டத்தில் உள்ள யுக்சோம் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடமேற்கே இதன் மையப்பகுதி அமைந்திருந்தது.

மேலும், பூமிக்கு அடியில் சுமார் 73 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேற்கு சிக்கிம் மட்டுமின்றி கிழக்கு சிக்கிமின் சில பகுதிகளிலும் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4.9-magnitude earthquake jolts Sikkim-Nepal region, tremors felt in Gangtok - Telangana Today

 இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.