தவெக புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம்.!

தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கும் கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் சந்திக்கும் நிகழ்வு பனையூரில் இன்று ஜனவரி 24ம் தேதி காலை நடைபெற்றது.
அப்பொழுது, தவெக தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். தவெக மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் நடத்திய ஆலோசனையின் போது, புஸ்ஸி ஆனந்த் வெளியேற்றப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள்…
— TVK Vijay (@tvkvijayhq) January 24, 2025
நடந்து முடிந்த ஆலோசனை கூட்டத்தில் தவெகவின் கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்டச் செயலாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள், ஒரு பொருளாளர், 2 துணைச் செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, 1 மாவட்ட செயலாளர், 1 இணை செயலாளர், 1 பொருளாளர், 2 துணை செயலாளர் என்ற அடிப்படையில் கட்சியின் மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக மதியழகன் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராகப் பரணி பாலாஜி அரியலூர் மாவட்ட செயலாளராக சிவக்குமார் சேலம் மத்திய மாவட்ட செயலாளராகப் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!