14 நாட்களுக்குப் பிறகு குறைந்த வெள்ளி விலை!

 
வெள்ளி விலை தங்கம்

 

தமிழகத்தில் சுமார் 14 நாட்களுக்குப் பிறகு வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. இதனால் வெள்ளி வாங்க விரும்புவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் வெள்ளி

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 2ஆம் தேதி முதல் நேற்று வரை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விலை குறைந்துள்ளதால், வெள்ளி வாங்கத் திட்டமிடுவோர் தற்போதைய விலை நிலவரத்தை கவனத்தில் கொள்ளலாம்.