வெள்ளி விலை கடும் வீழ்ச்சி.. .ஒரே நாளில் ரூ.15,000 சரிவு!
சர்வதேசச் சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவிலும் வெள்ளி விலையில் இன்று ஒரு மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹15,000 வரை சரிந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்ட நிலையில், இன்று வரலாற்றில் இல்லாத அளவிலான ஒரு நாள் சரிவை வெள்ளி கண்டுள்ளது.

இன்றைய விலை நிலவரம் ஒரு கிராம் வெள்ளி ₹15 குறைந்து ₹235 ஆக விற்பனையாகிறது (நேற்று ₹250 ஆக இருந்தது). ஒரு கிலோ வெள்ளி ₹15,000 குறைந்து ₹2,35,000 ஆக விற்பனையாகிறது.
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் சூழலால் முதலீட்டாளர்கள் தங்களுடைய லாபத்தைப் பணமாக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வட்டி தராத முதலீடான வெள்ளியின் தேவையைக் குறைத்துள்ளது.

இந்த மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு கிலோ வெள்ளி ₹3,15,000 என்ற உச்சத்தில் இருந்தது. தற்போது அது ₹2,35,000 ஆகக் குறைந்துள்ளது, அதாவது கடந்த 20 நாட்களில் மட்டும் கிலோவுக்கு சுமார் ₹80,000 (25%) வரை விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
