தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளைத் தடுப்பதற்கான எளிய வழிகள்!
ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பெரும் தொல்லையாக இருக்கும் தேவையற்ற விளம்பர மற்றும் மோசடி ஸ்பேம் அழைப்புகளைத் தடுப்பதற்குப் பல்வேறு எளிய வழிகள் உள்ளன.
உங்கள் மொபைல் போனில் இருந்து START 0 என டைப் செய்து 1909 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். இதன் மூலம் அனைத்து விதமான வர்த்தக மற்றும் விளம்பர அழைப்புகளும் முழுமையாகத் தடுக்கப்படும். 1909 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டும் DND சேவையைச் செயல்படுத்தக் கோரலாம்.
ஸ்மார்ட்போன்களின் Dialing/Phone Settings பகுதிக்குச் சென்று 'Block Unknown Calls' அல்லது 'Filter Spam Calls' என்ற அம்சத்தை ஆன் செய்வதன் மூலம் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய எண்களைத் தானாகவே தடுக்கலாம்.
ட்ரூகாலர் அல்லது பிற ஸ்பேம் தடுப்புச் செயலிகளைப் பயன்படுத்தி, ஸ்பேம் எனக் கண்டறியப்பட்ட எண்களைத் தானாகவே கண்டறிந்து பிளாக் செய்யலாம்.
மத்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்'TRAI DND 3.0' செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எண்களைப் பற்றி நேரடியாகப் புகார் அளிக்க முடியும்.
