"எளிமையே அடையாளம், மக்கள் சேவையே அரசியல்" - பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளுக்கு அண்ணாமலை புகழஞ்சலி!

 
 காமராஜர் அண்ணாமலை

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான இன்று, அவரது தியாக வாழ்வையும் தொலைநோக்குப் பார்வையையும் போற்றும் வகையில் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் மக்கள் நலப் பணிகளை நினைவுகூர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. 'அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும்' என்ற உயரிய எண்ணத்துடன், பட்டிதொட்டியெங்கும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, வறுமையால் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஏழைக் குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்குப் பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது."

தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு வித்திட்ட காமராஜரின் பிறந்தநாள், தமிழக அரசால் ஆண்டுதோறும் 'கல்வி வளர்ச்சி நாளாகக்' கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் கலப்பற்ற தூய நிர்வாகத்திற்கும், நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த பெருந்தலைவரின் வழியைப் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்பதை உணர்த்தும் விதமாக அண்ணாமலையின் இந்த வாழ்த்துப் பதிவு அமைந்துள்ளது.