சிங்கப்பூர் பஸ் பயணிகளுக்கு புதிய விதி! இடையூறு செய்தால் ரூ.3.7 லட்சம் வரை அபராதம்!

 
பேருந்து

 

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகளில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, பஸ் பயணிகளுக்கு தொந்தரவு அல்லது இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.பஸ் இருக்கைகளில் கால்களை வைப்பது, அதிக சத்தத்தில் ஆடியோ அல்லது வீடியோ ஒலிக்கச் செய்வது, பஸ்சுக்குள் குப்பை போடுவது, உணவு அல்லது பானங்களை உட்கொள்வது போன்ற செயல்களுக்கு அதிகபட்சமாக 500 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்க முடியும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.37,000 ஆகும்.

S'pore & M'sia in talks to let cross-border taxis drop passengers off at final destination instead of designated points: Sun Xueling - Mothership.SG - News from Singapore, Asia and around the world

மேலும், பஸ் நிலையங்கள் மற்றும் முனையங்களில் சக பயணிகளுக்கு ஆபத்து அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, பஸ் அல்லது பஸ் நிலையத்தின் எந்தப் பகுதியையும் அசுத்தப்படுத்துவது போன்ற கடுமையான விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக 5,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.3.7 லட்சம் ஆகும்.

புதிய விதிகளின்படி, பஸ் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் விதிமீறலில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் பயணிகளுக்கு Administrative Notification of Offence வழங்க முடியும். பின்னர் சிங்கப்பூர் Land Transport Authority (LTA) விசாரணை நடத்தும்.

ஆனால் பஸ் ஓட்டுநர்கள் நேரடியாக அபராதம் அல்லது நோட்டீஸ் வழங்கும் அதிகாரம் பெறவில்லை. அவர்கள் பயணிகளிடம் இடையூறு ஏற்படுத்தும் செயலை நிறுத்துமாறு அறிவுறுத்தலாம். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் பஸ்சில் இருந்து இறங்குமாறும் கூறலாம். பயணி ஒத்துழைக்காவிட்டால் தேவையான சூழலில் போலீஸ் உதவியையும் கோர முடியும்.

பொதுப் போக்குவரத்தில் அனைவருக்கும் வசதியான, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே புதிய விதிகளின் நோக்கம் என சிங்கப்பூர் LTA தெரிவித்துள்ளது.