15 வயது மாணவியுடன் லெஸ்பியன் உறவு - ஆசிரியைக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு!
சிங்கப்பூரில் 15 வயது மாணவியிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்கில், 35 வயது பெண் ஆசிரியைக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் பெற்றோரின் துன்புறுத்தல்களால் மனவேதனை அடைந்த 15 வயது மாணவி, கடந்த 2023-ஆம் ஆண்டில் தனது சிரமங்களை அந்தப் பெண் ஆசிரியையிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்த அந்த ஆசிரியை, பின்னர் அந்த உறவை பாலியல் ரீதியான உறவாக மாற்றிக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 2023 காலகட்டத்தில் கரோக்கி விடுதி, பள்ளி கழிவறை மற்றும் பேருந்து போன்ற பல்வேறு இடங்களில் மாணவியுடன் பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் கடந்த 2024-ஆம் ஆண்டில் ஆசிரியை கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து தற்போது நீதிமன்றம் குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. திருமணமாகி 4 வயதில் குழந்தையும் உள்ள ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
