பிரபல பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது அறிவிப்பு!

 
அருணா சாய்ராம்

பிரபல கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசை பாடகியாகவும், இசை அமைப்பாளராகவும் கோலோச்சுபவர் அருணா சாய்ராம். சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு வரை அவர் பொறுப்பு வகித்தார்.

அருணா சாய்ராம்

மத்திய அரசின் பத்மஸ்ரீ, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் சங்கீத கலாநிதி, தமிழக அரசின் கலைமாமணி விருது, அமெரிக்க பார்லிமென்டின் உயர் சிறப்பு விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற் றுள்ளார்.

இந்நிலையில், அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய கவுரவமான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருணா சாய்ராம்

இந்தியாவில் உள்ள எல்லா பெரிய சபைகளிலும் அருணா சாயிராம் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி உலகின் பல இடங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?