தங்கையின் காதலனைக் கொடூரமாக குத்தி கொன்ற அண்ணன்... எண்ணூரில் பரபரப்பு!

 
பள்ளி காதல்

சென்னை எண்ணூர் ஆதி திராவிடர் காலனியில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 19). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த பால் ராஜ் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்களும் மறுநாள் மகன் வீட்டிற்கு வருவார் என கூறி அமைதி காத்துள்ளனர்.

இந்நிலையில், எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரை எதிரே உள்ள காலி மைதானத்தில் நேற்று காலை பால்ராஜ் தலை, கை, கால்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பால்ராஜ் உள்ளூர் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண்ணின் சகோதரருக்கு பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் சகோதரர் இருவரையும் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதை காதில் வாங்காத காதல் ஜோடி தொடர்ந்து காதலில் உறுதியாக இருந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் சகோதரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பவுல்ராஜை சம்பவத்தன்று காலி மைதானத்திற்கு அழைத்துள்ளார்.

விளாத்திகுளத்தில் மனைவி கொலை

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பால்ராஜ் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது உறுதியானது. மேற்கண்ட தகவல் அறிந்த காவல் துறையினர் இளம்பெண்ணின் சகோதரர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web