தங்கை தற்கொலைக்கு பழி.... வக்கீல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

 
வக்கீல் வக்கீல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, தங்கை தற்கொலை செய்துகொண்ட ஆத்திரத்தில் வக்கீலை அவரது தந்தை கண் முன்பே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்த மைத்துனர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்போடுவாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் (35), தனது மனைவி ராஜலெட்சுமி தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் தந்தை வீட்டில் இருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

கடந்த 3-ம் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ராஜலெட்சுமி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பூலுடையார் தான் காரணம் என ஆத்திரமடைந்த ராஜலெட்சுமியின் உறவினர் அருணாசல ராஜா (30), தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்கத் திட்டம் தீட்டினார். நேற்று மதியம் பூலுடையார் வீட்டில் இருந்தபோது, அரிவாளுடன் புகுந்த கும்பலைக் கண்டு அவர் தப்பியோட முயன்றுள்ளார்.

பாலியல் கொலை உல்லாசம் க்ரைம்

தெருவில் ஓடியபோது எதிர்பாராதவிதமாகக் கல் தடுக்கி கீழே விழுந்த பூலுடையாரை, அந்த கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த களக்காடு போலீசார், முக்கியக் குற்றவாளியான அருணாசல ராஜா மற்றும் அவரது உறவினர் ராம் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.