17 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி வேறொருவருடன் காதல்... திருமணம் செய்து வைத்த கணவர்... நெகிழ்ச்சி வீடியோ!

 
உபி

 

17 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி, வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவரது விருப்பத்தை ஏற்று கணவரே காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சீதாபூரைச் சேர்ந்த விபின் பார்கவாவுடன் ரேகா என்பவர் 17 ஆண்டுகளாகக் குடும்பம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான ராகுல் உபாத்யாயுடன் ரேகாவுக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 22 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற ரேகா, பின்னர் திரும்பி வந்து ராகுலுடன் வாழ விரும்புவதாகக் கணவரிடம் தெரிவித்துள்ளார்.

மனைவியின் முடிவை ஏற்றுக்கொண்ட விபின், ரேகாவுக்கும் ராகுலுக்கும் கோயிலில் திருமணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது