நடுரோட்டில் சேர் போட்டு சிட்டிங்.. கொட்டும் மழையை ரசித்த போதை ஆசாமி.. சட்டென மோதிய லாரி!

 
பிரதாப் நகர்

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப் நகரில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சாலை மிகவும் பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில், சாலையின் நடுவில் ஒரு நாற்காலியில் ஒருவர் சாவகசமாக அமர்ந்திருந்தார். அந்த நபர் குடித்துவிட்டு நடுரோட்டில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், பரபரப்பான சாலையின் நடுவே பயமின்றி அமர்ந்திருக்கிறார்.


இருபுறமும் வாகனங்கள் அவரை கடந்து செல்கின்றன. அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி அவர் மீது மோதி நின்றது. நாற்காலி உடைந்தது. எனினும் அந்த மனிதர் மீண்டும் எழுந்து பழையபடி அமர்ந்தார்.

எந்த பயமும் இல்லாமல் லாரியில் அடிபட்டு அதே நிலையில் இருக்கும் வீடியோவும், லாரி மோதியது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   அப்போது போலீஸ் சோதனை சாவடி அருகே  போலீஸ் இருந்ததாகவும், அவர் சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web