இன்று முதல் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு... சிவகங்கையில் கெடுபிடி!

 
சிவகங்கை

 

மருதுபாண்டியர்கள் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று (அக். 20) முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பிறப்பித்துள்ளார்.

 மருது பாண்டியர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வரும் 24-ந்தேதி அரசு சார்பில் மருதுபாண்டியர் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, 27-ந்தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ந்தேதி முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், பாரதிய நாகரிக பாதுகாப்புச் சட்டம் (BNSS) பிரிவு 163(1)-ன் கீழ், பழைய சட்டப்பிரிவு 144-க்கு இணையான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.