சிவகங்கை: பள்ளி வேன் விபத்தில் ஓட்டுநர் பலி; 10 மாணவர்கள் படுகாயம் - விடுமுறை நாளில் இயங்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்!

 
லாரி பள்ளி பேருந்து

சிவகங்கை மாவட்டம் அருகே தனியார் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், விடுமுறை நாளிலும் பள்ளியை இயக்கியது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிவகங்கை அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில், வேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், வேனில் பயணம் செய்த 9 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து விபத்து

விபத்து நடந்த அன்றைய தினம் விடுமுறை நாளாகும். அரசு மற்றும் பள்ளி விடுமுறை நாளுக்கான தடையை மீறி அந்தத் தனியார் பள்ளி வழக்கம்போல இயங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுமுறை நாளிலும் தடையை மீறிப் பள்ளியை இயக்கியது ஏன் என்பது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் உடனடியாகக் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய நோட்டீஸை அனுப்பியுள்ளார்.