மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை... சிவகங்கையில் பரபரப்பு!

 
சிவகங்கை

 

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில், கடையில் தூங்கிக் கொண்டிருந்த 78 வயது மூதாட்டி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகனேரியைச் சேர்ந்த பொன்னி (78), அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகே சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். வியாபாரம் முடிந்ததும் இரவு நேரங்களில் கடையிலேயே படுத்து உறங்குவது வழக்கம்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடையின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த பொன்னியின் தலையில் மர்ம நபர்கள் கல்லைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை அவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதையடுத்து மதகுபட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கமா அல்லது முன்விரோதமா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.