சிவகங்கை ரவுடி மதன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது - கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 
சிவகங்கை ரவுடி மதன்

சிவகங்கை மாவட்டம் மேலமங்களம் பகுதியில் ரவுடி 'சுள்ளான்' மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் மேலமங்களம் பகுதியில் நிகழ்ந்த ரவுடி சுள்ளான் மதன் படுகொலை வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது.

சுள்ளான் மதன் ரவுடி

இந்நிலையில் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இவ்வழக்கோடு தொடர்புடைய சந்தோஷ் (19), ஜெய மாணிக்ராஜ் (20), முத்து சூர்யா (20), விக்னேஷ் (23) என மேலும் 4 வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்களின் கைது நடவடிக்கையோடு சேர்த்து, இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

கொலை இரட்டைக்கொலை ஆய்வு போலீசார் சிவகங்கை

இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கூண்டோடு பிடிக்கக் காவல் துறை சார்பில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.