சிவகங்கை அருகே சோகம்: வயலில் வேலை செய்த 2 பெண்கள் மின்னல் தாக்கி பலி!

 
சிவகங்கை

 

சிவகங்கை அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும் இளையான்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது நேர்ந்த இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.