சிவாஜி கணேசன் பிறந்தநாள்... “நடிப்பிற்கு இலக்கணம்” - முதல்வர் விஜய் புகழாரம்!

 
விஜய்

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தனது நிகரற்ற நடிப்பாற்றல் மற்றும் கம்பீரமான குரலால் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, திரையுலகில் தனக்கென அழியாத இடத்தைப் பிடித்தவர் சிவாஜி கணேசன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி

வரலாற்று நாயகர்கள், புராண கதாபாத்திரங்கள், சமூகத்தின் எளிய மனிதர்கள் என பல்வேறு வேடங்களில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய சிவாஜி கணேசன், திரைப்படங்கள் மூலம் தமிழின் செழுமையையும் பெருமையையும் உலகறியச் செய்தவர் என்றும் முதல்வர் விஜய் புகழ்ந்துள்ளார்.

மேலும், அன்பு, பாசம், வீரம், கோபம், சோகம் உள்ளிட்ட பல்வேறு மனித உணர்வுகளை தனது நடிப்பின் மூலம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியவர் சிவாஜி கணேசன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிப்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்: முதல்-அமைச்சர் விஜய் புகழாரம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலைப்பணிகள் தலைமுறைகளை கடந்து தமிழ் மண்ணின் பெருமையாக தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் முதல்வர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பிலும் சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.