சிவகார்த்திகேயன் மகனுக்கு சொந்த ஊரில் காதணி விழா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவர் 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் கவனம் ஈர்க்கும் கதாநாயகனாக தம்மை உயர்த்திக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி . இவர் சிவகார்த்திகேயனின் மாமா மகள் தான். இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் குகன் மற்றும் பவன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இளைய மகன் பவனுக்கு காதணி விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இந்த விழா திருவாரூரில் அமைந்துள்ள சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் நடந்தது. அதனை தொடர்ந்து அந்த கிராம மக்கள் சிவகார்த்திகேயனுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!