சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

 
பட்டாசு ஆலை வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்த்துள்ளது. சட்டவிரோதமாகத் தகர செட் அமைத்துச் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது:

பட்டாசு தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உரசலால் வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் உடல் சிதறி 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்:

விபத்தின் தீவிரத்தால் ஆலை இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமான மேலும் ஒருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.