சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! கட்டடம் இடிந்து தரைமட்டம்... தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

 
பட்டாசு ஆலை வெடி

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மம்சாபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த வாரி பட்டாசு ஆலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடி வெடிபொருள் தீ

வெடிவிபத்தின் தீவிரத்தால் பட்டாசு ஆலைக் கட்டடம் இடிந்து தரைமட்டமானதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகாசி வெடி விபத்து பட்டாசு ஆலை

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. விபத்தில் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே சேத விவரங்கள் முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு ஆலை விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.