’சிவகாசி சம்பவம்’.. அது ஆணவக்கொலை அல்ல.. புது விளக்கம் கொடுத்த காவல்துறை!

 
கார்த்திக் பாண்டியன்

சிவகாசி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கார்த்திக் பாண்டியன் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆணவக்கொலை அல்ல என்றும், வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் கூறினார். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டம், அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரி முத்து மகன் கார்த்திக் பாண்டியன் (27), மகாத்மா காந்தி நகரில் வசிக்கும் பொன்னையா மகள் நந்தினி (22) என்பவரும் காதல் திருமணம் செய்து அய்யம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தனர்.இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபாலமுருகன், அவரது நண்பர் சிவா ஆகியோர் நேற்று (ஜூலை 24) நந்தினி வேலை பார்த்து வந்த லெட்சுமி நகர் கண்ணன் சூப்பர் மார்க்கெட் அருகே கார்த்திக் பாண்டியனை வெட்டிக் கொன்றனர்.

சிலர் இந்தக் கொலையை ஆணவக் கொலை என்று தவறாக நினைக்கிறார்கள். இது ஆணவக் கொலை அல்ல. இறந்தவரும், அவர் காதல் திருமணம் செய்த பெண்ணும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் இவர்களது மற்றொரு சகோதரியும் காதல் திருமணம் செய்து கொண்டார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது சகோதரர்கள் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே,  உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது,'' என கூறப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web