தவறை மறைக்க சிவகார்த்திகேயன் செய்த செயல்.. என்னிடம் இருக்கும் முக்கிய ஆதாரம்.. பகீர் கிளப்பும் வலைப்பேச்சு அந்தணன்..!

 
சிவகார்த்திகேயன் - டி இமான்
தப்பை மறைக்க பல கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் கொடுத்ததாக  வலைப்பேச்சு அந்தணன் பகீர் பேட்டி அளித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

டி.இமான் மற்றும் சிவகார்த்திகேயனிற்கு இடையேயான பிரச்சனை திரையுலகினரையும் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான மனம் கொத்தி பறவை படத்திற்காக இசையமைத்திருந்தார் டி.இமான். அடுத்து வெளியான சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு டி.இமான் இசையமைப்பாளராக இருந்துள்ளார். இதையடுத்து, பேட்டி அளித்த டி இமான், சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகம் செய்து விட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண முடியாது என்றும் கூறினார்.

சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” - டி.இமான்  குற்றச்சாட்டு | d imman accuse sivakarthikeyan did a big betrayal to him -  hindutamil.in

இது குறித்து அவரிடம் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அவர் கூறிய பதிலை தன்னால் கூற முடியாது என்றும் கூறினார் இமான். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், இதுதான் டி இமானின் விவாகரத்திற்கு காரணம் என்று வதந்திகளை இணையத்தில் பரப்பி வந்தனர். இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த வலைப்பேச்சு அந்தணன், பிறர் மனை நோக்காமை என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மதிக்காதது தான் காரணம். ஒருவரை நம்பி வீட்டிற்குள் அழைக்கும் போது அதற்கான மரியாதையை அவர் காப்பாற்றி இருக்க வேண்டும். 

அதே போல இந்த விவாகரத்தை மறுத்து அறிக்கை வெளியிட்ட இமானின் முன்னாள் மனைவி, சிவகார்த்திகேயனை நல்லவர், வல்லவர் என்று சொன்னபோதே உங்களுக்கும் அவருக்கும் என்ன உறவு என்று தான் கேட்கத் தோன்றுகிறது. இந்த விவகாரத்தில் மோனிகா கருத்து தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்து இருக்கலாம்.

அதை நினைச்சாலே என் வயிறு எரியுது… ஸ்ரீகாந்த் படத்தின் படப்பெட்டியை கடலில்  தூக்கி எறிந்த தயாரிப்பாளர்… - CineReporters

மேலும், சிவகார்த்திகேயன் VS டி இமான் விவகாரத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது. இருவரின் இந்த பிரச்சனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து விட்டார்கள். சிவகார்த்திகேயனுக்கு யூடியூபில் ஆதரவாக பேசுகிறவர்களுக்கு பெரும் தொகையும், எதிராக பேசுபவர்களின் யூடியூப் சேனலுக்கு ஸ்டைரைக் கொடுக்கப்படுகிறது. இதற்கான ஒரு ஆடியோ ஆதாரமே என்னிடம் உள்ளது. அதை தேவைப்பட்டால் வெளியிடுவேன் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

From around the web