புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடங்கியது!

 
புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடங்கியது!

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. இதில் கவர்னர் உரையில், ‘விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு இடம் பெற்றது. இதையடுத்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆர்வத்துடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க தொடங்கினர்.
தினமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வந்தன. இதனையடுத்து இப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் ஜூலை 1 நேற்று முதல் புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடங்கியது!

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி இந்தியாவில் வசிக்கும் ஒருவர் நாட்டின் எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் கைவிரல் ரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகை, விலையில்லா மளிகை பொருட்கள் வழங்கும் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாலும் மீண்டும் கைரேகை பதிவு முறை தொடங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் இரு தவணைகளில் ரூ.2000/-வீதம் மே, ஜூன் மாதங்களில் வழங்க ஆணையிடப்பட்டது. இத்துடன் 14 மளிகைப்பொருட்கள் வழங்கவும் ஆணையிடப் பட்டது. இதனைப் பெற வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், தாமதமின்றி நிவாரணத்தொகை மற்றும் தொகுப்பு பையினையும் பெற்று செல்லவும் கைவிரல் ரேகை நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடங்கியது!

புதிய மின்னணு குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்கள்,களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை நிலவி வருகிறது. தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் பதிவையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web