தூத்துக்குடியில் அதிர்ச்சி... ஸ்மார்ட் சிட்டி மின்கம்பம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி மின் கம்பத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் நடுவில் ரோப் லைட் எனப்படும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி

இந்நிலையில் நேற்றிரவு தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள தேவர்புரம் ரோட்டில் இருந்த கம்பத்தில் கட்டப்பட்டிருந்த வயர் திடீரென தீப்பற்றி எரிந்தது.  இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. 

தீயணைப்பு வாகனம் தீ நெருப்பு

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தூத்துக்குடியில் பல இடங்களில் மின் கம்பங்களில் கேபிள் டிவி, இன்டெர்நெட் வயர்கள் அனுமதியின்றி கட்டப்படுகிறது. தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்களை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!