“இவ்வளவு குப்பையா...?” ஸ்கூல் வகுப்பறையை துடைப்பத்தால் பெருக்கிய மேயர்!
இவ்வளவு குப்பையாகவா வெச்சிருப்பீங்க... என்று அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கடலூர் மேயர் சுந்தரி ராஜா, திடீரென துடைப்பத்தைக் கொண்டு பள்ளி வகுப்பறையில் ஒட்டடை அடித்து, பெருக்க ஆரம்பித்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கடலூரில், மாநகராட்சி பள்ளியில் தூய்மையை வலியுறுத்தி மேயர் வகுப்பறையை சுத்தம் செய்தார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா நேற்று செப்டம்பர் 24ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வகுப்பறைகளை பார்வையிட்ட அவர், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகவும், புழுதியாகவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலக அதிகாரிகளை அழைத்து பள்ளியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். வகுப்பறைகளை ஏன் சுத்தம் செய்யவில்லை? இவ்வளவு குப்பைகளோடு அமர்ந்து பாடம் படித்தால் மாணவர்களின் உடல் நலனும், மன நலனும் என்னாகும்? என்று பள்ளியின் தலைமை ஆசிரியரை கண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்று ஓரமாக இருந்த துடைப்பத்தை எடுத்துக் கொண்டு அவரே சுத்தம் செய்யத் துவங்கிவிட்டார்.
அதன் பிறகு பேசிய மேயர், மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!