நீச்சல் குளத்தில் மூழ்கி கால்பந்து வீரர் படுகாயம்.. கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் அனுமதி!

 
கால்பந்து நீச்சல் குளம் யேல் டிரெப்பி

இத்தாலியில் நடைபெற்று வரும் 'கோபா இத்தாலியா' கால்பந்து தொடரில் விளையாடி வரும் காக்லியாரி அணியின் இளம் வீரர் யேல் டிரெப்பி , ஓட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கிப் படுகாயமடைந்த சம்பவம் விளையாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான காக்லியாரி அணி வீரர் யேல் டிரெப்பி, இத்தாலியின் சர்டினியா நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அங்குள்ள நீச்சல் குளத்தில் திடீரென மூழ்கியுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யேல் டிரெப்பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீச்சல் குளத்தில் அவர் எப்படி மூழ்கினார், இச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து அந்நாட்டுப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.