ரயில் பெட்டிகளில் சோலார் பேனல்கள்.. மின்சாரச் செலவைக் குறைக்க இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி!

 
rail

இந்திய ரயில்வே துறை சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், டீசல் பயன்பாட்டைக் குறைத்து பசுமை ஆற்றலை ஊக்குவிக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்களின் கூரைகளில் அமைக்கப்படும் சோலார் பேனல்கள் மூலமாகப் பெறப்படும் சூரிய ஒளி மின்சாரம், ரயிலுக்குள் உள்ள மின்விசிறிகள் மற்றும் விளக்குகளை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது. நிலப்பரப்பு ஏதுமின்றி ஓடும் ரயில்களின் கூரைகளையே மின் உற்பத்தி மையங்களாக மாற்றும் இந்த முயற்சி பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தச் சிறப்புச் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ரயில்களில் உள்ள பேட்டரிகளில் சேமிக்கப்பட்டு இரவிலும் தடையின்றிப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் பெருமளவிலான டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் ரயில்வே துறைக்கு மிச்சமாகிறது. மேலும் சுற்றச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வும் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ரயில்வேயின் இந்தச் சூழல் நட்பு நடவடிக்கை மின்சாரச் செலவை மிச்சப்படுத்துவதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

Solar panels to power onboard amenities in NCR's new coach, ETEnergyworld

இந்திய ரயில்வே அமைத்துள்ள இந்த சூரிய ஒளி மின் உற்பத்தி முறை பிற நாடுகளுக்கும் முன்னோடியாகவும் வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்துப் பயணிக்கும் ரயில்களிலும் இந்த சோலார் அமைப்புகளைப் விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய இந்த நவீன தொழில்நுட்ப மாற்றம் ரயில்வே துறையில் புதியதொரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிகளின் கூரைகளில் சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் இந்திய ரயில்வேயின் இந்த முயற்சிக்கு அனைத்துத் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.