விமானத்தில் இருந்து இறங்கிய போலீஸ் ... சுழலும் இறக்கை தாக்கி சம்பவ இடத்திலேயே பலி... அதிர்ச்சி வீடியோ!
விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து கீழே இறங்கிய போலீஸ் பாதுகாப்புப் படை வீரர், அதன் சுழலும் இறக்கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் துசமாரெப் விமான நிலையத்தில் கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
WARNING: DISTURBING Somalia police chief's bodyguard KILLED after WALKING INTO plane's STILL-ROTATING PROPELLER as he leaves aircraft https://t.co/eR5cjTjnE2
— RT (@RT_com) November 3, 2026
மொகடிஷு நகர போலீஸ் தலைமை அதிகாரி மாலின் மஹ்தி மற்றும் அவரது பாதுகாப்புக் குழுவினர், கல்முடுக் மாநிலத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவிருந்த லிபன் அகமது ஹசனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக விமானத்தில் வந்துள்ளனர்.
அப்போது பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த முக்தார் காசிம் சமய் என்பவர் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். விமானத்தின் புரொப்பல்லர் எனப்படும் சுழலும் இறக்கை இன்னும் இயங்கிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் எதிர்பாராதவிதமாக சுழலும் இறக்கை அவரது தலையில் பலமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உயிரிழந்த வீரருக்கு போலீஸ் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
