வாக்குவாதத்தில் தந்தையை தாக்கிய மகன்.. சிகிச்சை பலனின்றி போலீஸ் எஸ்.ஐ பரிதாபமாக பலி!

 
விஜயபாஸ்கர் - சுகாஸ்

சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் (52). இவர் சென்னை விமான நிலையத்தில் உள்ள எஸ்பிசிஐடி பிரிவில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், விஜயபாஸ்கர் வீட்டிற்கு வருவதற்கு பதிலாக தனது தாயார் வீட்டிலேயே தங்கி வந்தார். இது தொடர்பாக, விஜயபாஸ்கருக்கும் அவரது மகன் சுகாஸ் (21) என்பவருக்கும் இடையே கடந்த 25 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.

சாதி சண்டை

வாக்குவாதம் அதிகரித்ததால், சுகாஸ் தனது தந்தையை கையால் கடுமையாக தாக்கினார். இதில், அவரது தாடை முழுவதுமாக உடைந்து, காதில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொலை

இதையடுத்து, தந்தையைத் தாக்கிய அவரது மகன் சுகாஸை நீலாங்கரை போலீசார் கைது செய்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.சுயநினைவு இல்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயபாஸ்கர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாஸ் மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார், ஆனால் இப்போது அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!