தமிழகத்தில் டெஸ்லா ... விரைவில் ஆய்வு !

 
டெஸ்லா

 மத்திய அரசு கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில்  புதிய மின்சார வாகன கொள்கைக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கொள்கையால் டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. டெஸ்லாவின்  இந்தியாவில் மெக்சிகோ ஆலை திட்டம் கேள்விக்குறியாக இருப்பதால், இப்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வு செய்ய இம்மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து வர உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் குழு ஒன்று ஏப்ரல் மாத இறுதியில் வரவுள்ளது எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் சிறப்பாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றில் தொழிற்சாலை ஆமைக்க வாய்ப்பு இருக்கிறதுக் கூறப்படுகிறது. 

டெஸ்லா


டெஸ்லா குழு முதல் கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் ஆய்வு செய்யும் எனவும் பிறகு தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வார்கள் எனத்  தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியா வருகையின் போது தொழிற்சாலை அமைக்க சாதகமான இடம் மற்றும் ஏற்றுமதி உள்ள வசதிகள் குறித்து இந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாவும் தெரிகிறது.
துறைமுகங்கள் கொண்ட கடற்கரை ஓர மாநிலங்களாக இருப்பதால் தான் இவற்றை டெஸ்லா தேர்ந்தெடுத்துள்ளது. பிற தெற்காசிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றமதி செய்யும் மையமாக அந்த புதிய ஆலையை அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  

டெஸ்லா


டெஸ்லா இந்தியாவில் புதிய ஆலையைத் தொடங்கியதும் முதலில் 30000 டாலருக்கு உட்பட்ட குறைந்த விலையில் சிறிய ரக காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என  சொல்கிறார்கள். டெஸ்லா நிறுவனத்தின் வழக்கமான எலைட் காராக இல்லாமல், பட்ஜெட் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பட்ஜெட் கார் மாடலுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, பிற்காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய திட்டத்துடன் இந்தியாவுக்கு வரும் டெஸ்லா மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பதால் ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லாவின் வருகை ஆவலுடன் உற்றுநோக்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web