எகிறும் எதிர்பார்ப்பு... ‘சூது கவ்வும் 2’ கலெக்ஷனை அள்ளுமா?! ரசிகர்கள் கொண்டாட்டம்!
அர்ஜுன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, ஹரிஷா, அருள்தாஸ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த படத்தில் அதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டீசர் வெளியான போதே இந்த படத்திற்காக 3 ஆண்டுகள் கதைக்காக உழைத்தோம் என படக்குழுவினர் கூறியுள்ளனர். அவதார் படமா எடுக்குறீங்க 3 வருஷம் வேலை பார்க்க என மிர்ச்சி சிவாவே பங்கமாக கலாய்த்தது டிரெண்டாகியுள்ளது.
2013ல் வெளியான சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் 2ம் பாகத்தின் டிரெய்லரில் விஜய் சேதுபதி காட்டி அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் இயக்குநர் அர்ஜுன் செம கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளார். நெல்சனுக்கு முன்னதாக டார்க் காமெடி படமாக வெளியாகி வெறித்தனம் காட்டிய படம் என்றால் அது சூது கவ்வும் தான். கானா பாலா குரலில் அந்த படத்தில் இடம்பெற்ற "காசு பணம் துட்டு மணி மணி" பாடலை பாடாத ஆளே கிடையாது என்கிற அளவுக்கு வேறலெவலில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன் 2ம் பாகம் 11 ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய ஃபிளேவரில் புதிய டீமுடன் உருவாகி இருக்கிறது. நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உட்பட சிலர் நடித்துள்ளனர்.

மேலும், பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த சூது கவ்வும் 2 படத்தின் கலக்கலான காமெடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. சூது கவ்வும் படத்தின் 2ம் பாகத்தை பாகம் 2த்டஹிம் பாகத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றதுமே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்றே குறைந்து இருந்தது. இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சஞ்சிதா ஷெட்டி வரும் காட்சிகளையும் வைத்து கட் செய்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2 படங்களுக்கும் இடையேயான கனெக்ஷனும் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் டிசம்பர் 13ம் தேதி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்த வாரம் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2 வெளியாகிறது. .
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
