தமிழுக்கு புது வரவு... ‘சூது கவ்வும் 2' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் எம்ஜிஆரின் நண்பர் ஜஸ்டின் பேத்தி!
இது மூன்றாவது தலைமுறை. ‘சூது கவ்வும்2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹரிஷா ஜஸ்டின், நடிகை பபிதாவின் மகள். இவரது தாத்தா ஜஸ்டின் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான நண்பர். பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்துள்ளவர்.
கடந்த 2013ல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'சூது கவ்வும்' படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கி உள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
டிசம்பர் 13ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஹரிஷா ஜஸ்டின் இப்போதே கவனம் ஈர்க்க துவங்கியிருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் ஜஸ்டினின் மகள் பபிதா சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கவர்ச்சி நடிகையாக ஒரு பாடலுக்கு நடனமாடி வந்த நிலையில், 3வது தலைமுறையாக நடிகை பபிதாவின் மகள் ஹரிஷா திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
ஏற்கெனவே சில சிறிய படங்களில் ஹரிஷா நடித்திருந்தாலும் அந்த படங்கள் இன்னும் ரிலீசாகாத நிலையில் தற்போது 'சூதுகவ்வும் 2' என்கிற காஸ்ட்லி விசிட்டிங் கார்ட்டோடு அறிமுகமாகிறார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
