“இருங்க அண்ணி... இன்னும் நிறைய இருக்கு!”... பாமக எம்.எல்.ஏ பேச்சுக்கு சௌமியா அன்புமணி சிரிப்பு!

 
சௌமியா

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது பாமக சட்டமன்ற உறுப்பினர்களிடையே நடைபெற்ற நகைச்சுவையான உரையாடல், பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார் நீண்ட நேரம் உரையாற்றிக் கொண்டிருந்தார். இதனால் அவையை வழிநடத்திய துணைச் சபாநாயகர், உரையை விரைவில் நிறைவு செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார்.

சௌமியா அன்புமணி

அப்பொழுது பாமக சட்டமன்றக் குழுத் தலைவரும் எம்.எல்.ஏவுமான சௌமியா அன்புமணி, தலையிட்டு கணேஷ்குமாரிடம் “பேச்சை 5 நிமிடத்தில் முடியுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.சௌமியா அன்புமணியின் வேண்டுகோளுக்குப் பதிலளித்த எம்.எல்.ஏ கணேஷ்குமார், “இருங்க அண்ணி... இன்னும் பேச நிறைய விஷயங்கள் இருக்கு, 5 நிமிடத்தில் எப்படி முடிக்க முடியும்?” என்று இயல்பாகப் பதிலளித்தார்.

சௌமியா

எம்.எல்.ஏ கணேஷ்குமார் 'அண்ணி' என்று அழைத்து அப்படிப் கூறியதைக் கேட்டுச் சௌமியா அன்புமணி தனது முகத்தை கைகளால் மறைத்தபடி சிரித்தார். சட்டப்பேரவை விவாதங்களின் நடுவே நடந்த இந்த சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான நிகழ்வு, அங்கிருந்த அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.