தென்கொரியாவில் நாய் இறைச்சிக்குத் தடை - கடைசியாக ஒரு முறை சுவைக்க உணவகங்களில் அலைமோதும் மக்கள்!
Sep 17, 2026, 17:50 IST
தென்கொரியாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்கிவந்த நாய் இறைச்சி விற்பனைக்கு வரும் 2027 பிப்ரவரி மாதம் முதல் முழுமையான தடை அமலுக்கு வர உள்ள நிலையில், உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தென்கொரியாவில் பல ஆண்டுகளாகப் பாரம்பரிய உணவாகப் பரிமாறப்பட்டு வந்த நாய் இறைச்சிக்கு வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அரசு முழு தடை விதிக்கவுள்ளது.
இந்தத் தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதால், தசாப்தங்களாக நாய் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டுவந்த பல உணவகங்கள் தற்போது வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றன.
சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, நாய் இறைச்சியைத் தங்களின் வாழ்நாளில் இறுதியாக ஒரு முறை சுவைத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அப்பகுதி மக்கள் அங்குள்ள உணவகங்களில் அதிக அளவில் குவித்து வருகின்றனர்.
